Uncategorized
“”நாங்க சொன்னது தப்புனா கேஸ் போடுங்க..!” சபை நடுவே ஆக்ரோஷமாக சவால் விட்ட கே.என்.நேரு.. ஆதவ் அர்ஜுனா கொடுத்த மரண மாஸ் பதில்.. சூடான சட்டசபை..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவது குறித்த விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மூத்த திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, “நாங்கள் சொன்னது தவறு என்றால் எங்கள் மீது தாராளமாக வழக்கு தொடருங்கள்” என அதிரடியாக சவால் விடுத்துப் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கணக்கில் வெறும் 10,000 ரூபாய் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, வெளியில் ரேஞ்ச் ரோவர் காரில் வலம் வரும் அமைச்சர்கள் யாரும் இங்கு இல்லை” என மிகக் கடுமையான தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைத்தார். இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பும் கூச்சல் குழப்பமும் நிலவியது.
