“இந்தியாவிலேயே முதன்முறை..” தமிழ் நாட்டிற்கு வரும் அமெரிக்க பிரம்மாண்ட நிறுவனம்.. முதலமைச்சர் முன்னிலையில் அதிரடி ஒப்பந்தம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“இந்தியாவிலேயே முதன்முறை..” தமிழ் நாட்டிற்கு வரும் அமெரிக்க பிரம்மாண்ட நிறுவனம்.. முதலமைச்சர் முன்னிலையில் அதிரடி ஒப்பந்தம்..!!

Published

on

தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் உள்ள தரமணி டிஎல்எஃப் டவுன்டவுன் வளாகத்தில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி நிறுவனமான வால்கிரீன்ஸ் தனது உலகளாவிய திறன் மற்றும் தொழில்நுட்ப மையத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னையில் அமைக்கப்படவுள்ள இந்த அதிநவீன மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தகச் சேவைகளை வழங்கி வரும் இந்த வால்கிரீன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் கால்பதிப்பது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குக் கிடைத்த முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த புதிய உலகளாவிய தொழில்நுட்ப மையம் தமிழ்நாட்டில் அமைவதன் மூலம், முதற்கட்டமாக சுமார் 250 தகுதிவாய்ந்த நபர்களுக்கு உயர்தர மற்றும் உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் நேரடியாகக் கிடைக்கவுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் லண்டன் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப மையங்களின்தலைநகரமாக மாற்றும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச மருத்துவத் தொழில்நுட்பத் துறையிலும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி ஒப்பந்தம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in