“அடக்கடவுளே.. தேர்வில் ChatGPT யூஸ் பண்ணி ஐஐடி மாணவர் செய்த பகீர் காரியம்..” கடுமையாக எச்சரித்த ஆசிரியர்.. விடுதியில் நேர்ந்த சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“அடக்கடவுளே.. தேர்வில் ChatGPT யூஸ் பண்ணி ஐஐடி மாணவர் செய்த பகீர் காரியம்..” கடுமையாக எச்சரித்த ஆசிரியர்.. விடுதியில் நேர்ந்த சோக சம்பவம்..!!

Published

on

மும்பை ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் தேர்வின் போது சாட் ஜிபிடி பயன்படுத்தி காப்பியடித்ததாகக் கூறி ஆசிரியர்கள் கண்டித்ததால், மனமுடைந்த இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் எனர்ஜி அண்ட் சைன்ஸ் துறையில் படித்து வந்த ஷகில் வாகுடே என்ற மாணவர், நேற்று முன்தினம் நடந்த தேர்வில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு ஆசிரியர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், நேற்று மாலை தனது விடுதி அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த மரணத்திற்குப் பல்கலைக்கழக நிர்வாகமே காரணம் எனக் கூறி ஐஐடி பாம்பே மாணவர்கள் நேற்று விடுதி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாடு மற்றும் மாணவர்களின் மன அழுத்தம் எந்த அளவிற்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தற்போதைய சான்றாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in