Uncategorized
“பயணிகளின் உயிர் தான் முக்கியம்..” பேருந்து ஓட்டும்போதே வந்த மாரடைப்பு.. கடைசி நொடியில் கடவுளாக மாறிய ஓட்டுநர்.. தமிழகத்தையே அழ வைத்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, நடுவழியில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு 25-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது ஓட்டுநர் வெங்கடசாமி, நேற்று காலை பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.பேருந்து குடியாத்தம் புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலி உருவாகியுள்ளது.
நெஞ்சு வலியால் துடித்த நிலையிலும் நிலைதடுமாறாமல், பேருந்தை வேகம் குறைக்காமல் மெதுவாக இயக்கி சாலையின் ஓரமாகப் பத்திரமாக நிறுத்திய வெங்கடசாமி, அடுத்த கணமே இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.பயணிகள் அவரை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.பேருந்தை அவர் கட்டுப்பாட்டுடன் நிறுத்தாமல் இருந்திருந்தால், அது அருகில் இருந்த பாலத்தின் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று பயணிகள் கண்ணீர் மல்க ஓட்டுநரின் தியாகத்தைப் பாராட்டியுள்ளனர்.
