“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார்..!” போலீஸிடமே கதறி அழுது நாடகமாடிய கணவன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார்..!” போலீஸிடமே கதறி அழுது நாடகமாடிய கணவன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் அதிர்ச்சி உண்மை..!!

Published

on

பெங்களூரு பிலேகஹள்ளியில் உள்ள வாடகை வீட்டில், தனது ஃபோன் அழைப்புகளுக்குப் பதிலளிக்காத ஆத்திரத்தில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய ரஞ்சித் குமார் குப்தா (40) என்ற பீகார் வாலிபரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 16 அன்று இக்கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. துப்பட்டாவால் குஞ்சா மத்தேஷியாவின் (38) கழுத்தை நெரித்துக் கொன்ற ரஞ்சித், பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்து சமையல் எண்ணெயைச் சூடாக்கி, அவரது முகத்தைச் சிதைப்பதற்காக ஊற்றியுள்ளான். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்ற அவன், மாலையில் வந்து மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க நாடகமாடியுள்ளான்.

ஆனால், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த காவல் ஆய்வாளர் நடராஜ் டி.என் மற்றும் அவரது குழுவினர், ரஞ்சித்தின் பதற்றமான நடத்தையிலும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலத்திலும் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில மாதங்களாகவே அற்ப விஷயங்களுக்காக தங்களுக்குள் சண்டை தீவிரமடைந்ததாகவும், மனைவி தனது அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டான். கொலையாளி ரஞ்சித் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பதியினரின் இரு குழந்தைகளும் உறவினர்களின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in