Uncategorized
“CM டேபிள் மேல ஏறி ஆட்டம் போட்டது யார்..? சட்டைய கிழிச்சது யார்..?” சட்டசபையில் நிர்மல்குமார்-தளவாய் சுந்தரம் ரணகள விவாதம்.. சட்டுன்னு கே.என்.நேரு கொடுத்த கலகலப்பான பதிலடி…!!
தமிழக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆவேசமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். “முன்னாள் முதல்வர் டேபிள் மீது ஏறியது யார்? அவையில் சட்டையைக் கிழித்துக் கொண்டது யார்? என்பது போன்ற உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, தயவுசெய்து சபாநாயகர் அந்த வீடியோ பதிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்” என்று அவர் அவையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்தின் பேச்சுக்கு, திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு தனது பாணியில் மிகவும் கலகலப்பாகப் பதிலடி கொடுத்தார். “நான் எம்பியாக இருந்தபோதே என் மீது திமுக ஆட்சியில் 26 வழக்குகளும், அதிமுக ஆட்சியில் 14 வழக்குகளும் போடப்பட்டன; நான் ஒன்றும் வழக்குகளுக்குப் பயந்தவன் அல்ல, பலமுறை சிறைக்குச் சென்றுவிட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்று அவர் சிரித்தபடியேக் கூற, அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நீங்கள் அந்த மேஜை மீது ஏறி எப்படிலாம் ஆட்டம் போட்டீர்கள் தெரியுமா?” என்று திமுகவினரை நோக்கிப் பேசினார். இருதரப்பும் மாற்றி மாற்றிப் பழைய சம்பவங்களை இழுத்துப் பேசியதால் குறுக்கிட்ட சபாநாயகர், “நீங்க ரெண்டு பேரும் சபையை நடத்த விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி? பேசாமல் இருவரும் வெளியே போய் தனியாக மேடை போட்டுப் பேசுங்கள், அதை நாங்களும் ஆர்வமாகக் கேட்கிறோம்” என்று காரசாரமாகக் கண்டித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
