Uncategorized
பரபரப்பு..! கொலை முயற்சி வழக்கில் EX அமைச்சர் சேகர்பாபு விசாரணை… இன்ஸ்பெக்டர் வைத்த அந்த ஒரே ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்… அலறும் அரசியல் வட்டாரம்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக்குகழகம் வேட்பாளராகப் போட்டியிட்ட சினோரா அசோக் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை காவல்துறை அதிகாரிகள் சேகர்பாபுவிடம் தொடர்ந்து 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, சேகர்பாபுவிடம் விசாரணை நடத்தும் புகைப்படத்தைக் காவல் ஆய்வாளர் ராஜா என்பவர் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பதிவேற்றினார். காவல் துறை அதிகாரி ஒருவரே விசாரணைப் படத்தைப் பொதுவெளியில் பகிரும் வகையில் ஸ்டேட்டஸாக வைத்தது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உயர் பதவியில் இருந்த ஒரு முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படும் முறையையும், அதைச் சார்ந்த பாதுகாப்பு நடைமுறைகளையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரு காவல் ஆய்வாளரின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இச்சம்பவம் குறித்து பாலிமர் செய்தி நிறுவனம் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
