Uncategorized
“அவள் எனக்குத்தான்.. கள்ளக்காதல் காதல் விவகாரத்தால் கொளுந்துவிட்டு எரியும் வீடு..!” ஒரே பெண்ணுக்காக அரங்கேறிய சினிமா பாணி கொலை வெறித் தாக்குதல்… சோசியல் மீடியாவில் வைரலாகும் பகீர் காட்சி!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம், போர்கம்பாடு மண்டலத்தில் உள்ள ஜின்கலகுடெம் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த மௌலானா (42) மற்றும் இஸ்மாயில் ஆகிய இரு ஆண்களும் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அந்தப் பெண் தொடர்பாக அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தில் இஸ்மாயில், மௌலானா மீது தனது காரை மோதி அதிரடியாகத் தூக்கிப் பாய்ந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மௌலானா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மௌலானாவுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
https://twitter.com/TeluguScribe/status/2093932378028921136/video/1
இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து மௌலானாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளி இஸ்மாயில் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மௌலானாவின் மரணச் செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும், இஸ்மாயிலின் வீட்டிற்குத் திடீரென தீ வைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் கலவரச் சூழலும் நிலவியதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே பெண்ணுக்காக நடந்த இந்த கார் விபத்து மற்றும் பழிவாங்கும் தீ வைப்புச் சம்பவம் சோசியல் மீடியாவில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.
