Uncategorized
“என்கூட நீ இருந்தா போதும்” ஸ்கூல் பீஸ் கட்ட தேவையில்லை.. +2 மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்… பெற்றோரிடம் மாணவி கதறியதால் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!
புஷ்கரின் கேடா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது பதிவு நிதி (Registration Fee) செலுத்த பணமின்றி சிரமப்பட்டுள்ளார். த தந்தையின் சம்பளம் வந்ததும் இரண்டு நாட்களில் பணத்தைக் கட்டிவிடுவதாக மாணவி கூறியும், அதை ஏற்க மறுத்த தலைமை ஆசிரியர், விடுமுறைக்கு பின் தனியாக தங்கி தன்னுடன் நேரத்தை செலவிட்டால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனக் கூறி தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அம்மாணவி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் பள்ளிக்கு விரைந்து வந்து, தலைமை ஆசிரியரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மாணவியின் தோழி ஒருவர் கண்ணாடியில் கருப்பு மை கொண்டுவந்து கொடுக்க, அதை அழுதுகொண்டே அந்த தலைமை ஆசிரியரின் முகத்தில் அம்மாணவி பூசியுள்ளார். அதன்பின், அந்த தலைமை ஆசிரியரை பள்ளி வளாகத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
