“ரூ.500 தருகிறேன், என்னுடன் வா..!” வேலை முடிந்து திரும்பிய பெண்ணிடம் சீன் போட்ட சைக்கோ… காமுகனின் போதை வெறியை நடுத்தெருவில் அடக்கிய இளம்பெண்… வைரலாகும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“ரூ.500 தருகிறேன், என்னுடன் வா..!” வேலை முடிந்து திரும்பிய பெண்ணிடம் சீன் போட்ட சைக்கோ… காமுகனின் போதை வெறியை நடுத்தெருவில் அடக்கிய இளம்பெண்… வைரலாகும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் பகுதியில், வேலைக்குச் சென்று வரும் இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து, “ஐந்நூறு ரூபாய் தருகிறேன், என்னுடன் வா” என்று கூறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காமுகனுக்கு, அந்தப் பெண் வீராங்கனையாக மாறி நடுத்தெருவிலேயே செருப்பால் அடித்து தர்ம அடி கொடுத்த மாஸ் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் தினசரி வேலைக்குச் சென்று வரும் வழியில், இந்த ஆசாமி கடந்த பல நாட்களாகவே அவரைத் தொடர்ந்து வந்து, ஆபாசமான செய்கைகள் மூலம் கடுமையான மன உழைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளான். இந்நிலையில், ஒரு நாள் மாலை வேலை முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மீண்டும் அந்த ஆசாமி வழியை மறித்து அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான்.

बहुत दिन से पीछा कर रहा था… ऊपर से बोला- 500 रुपये दूंगा, मेरे साथ चलो। फिर लड़की ने ऐसी खातिरदारी की कि आशिकी का पूरा भूत उतर गया!

यह लड़की UP के जालौन रहने वाली है यह रोज काम के लिए आती-जाती थी। पिछले बहुत दिनों से यह आदमी उसका पीछा कर रहा था और रास्ते में अश्लील इशारे करके… pic.twitter.com/BnNvgZfKh0— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 24, 2026

இனி இவனைச் சும்மா விடக்கூடாது என்று துணிச்சலுடன் முடிவெடுத்த அந்தப் பெண், காமுகனின் சட்டைக் காலரைப் பிடித்துப் பலார் என அறறைந்ததுடன் நடுத்தெருவில் சத்தம் போட்டு மக்களைக் கூட்டியுள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அந்த இடத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களே அந்த ஆசாமியின் ஆடைகளைக் கிழித்துத் தர்ம அடி கொடுத்த சூழலில், அந்தப் பெண்ணும் தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவனது போதை வெறி ஒடுங்கும் அளவுக்குச் சரமாரியாக அடித்து வெளுத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகத் திரியும் இத்தகைய ரவுடிகளுக்குப் பாடம் புகட்டிய இந்த உ.பி. பெண்ணின் அசாத்தியத் துணிச்சல் மற்றும் செருப்படி ஆக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in