“ஒரு கை பார்த்துடலாம்..!” மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் ஆக்ரோஷமான முடிவு… ஆகஸ்ட் 3-இல் நடக்கும் மாஸ் சம்பவம்.. ஆடிப்போன கர்நாடகா..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“ஒரு கை பார்த்துடலாம்..!” மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் ஆக்ரோஷமான முடிவு… ஆகஸ்ட் 3-இல் நடக்கும் மாஸ் சம்பவம்.. ஆடிப்போன கர்நாடகா..!!

Published

on

மேகதாது பகுதியில் சுமார் ₹9,000 கோடி மதிப்பீட்டில் 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையை அமைக்க கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பெங்களூருவின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பத்திக்காகவே இத்திட்டம் என்று கர்நாடகா கூறினாலும், இந்த அணை அமைக்கப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு கடுமையாகக் குறையும். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புகளுக்கு எதிரான இத்திட்டம், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் தமிழக அரசு இதற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்திய அவர், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவிற்குப் பயணம் மேற்கொண்டு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தத்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக கர்நாடகா சென்றிருந்த போது அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு நதிநீர் குறித்துப் பேசாத முதலமைச்சர் விஜய், தற்போது நேரடியாகக் களத்தில் இறங்கிப் பேச்சுவார்த்தை நடத்தத் துணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் மேகதாது அணைப் பிரச்சினையில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த உயர் மட்டச் சந்திப்பு ஒரு புதிய திருப்பத்தையும் முக்கியமான தீர்வையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in