Uncategorized
அம்மாடியோ.! மசூதி வாசலில் பிச்சை எடுத்த பாட்டி இறந்த பின் வீட்டிற்குள் சென்ற கமிட்டி… “1 கோடி இருக்குமாம்” சாக்கு மூட்டையை திறந்ததும் அதிர்ந்துபோன ஊர்…!!
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில், மசூதி அருகே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் சென்ற மசூதி கமிட்டி உறுப்பினர்களுக்கு அங்கு சாக்கு மூட்டைகளில் அதிகளவில் பணம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டின் பல்வேறு இடங்களில் சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சேமிப்புத் தொகை 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதியவரின் இந்த விசித்திரமான சேமிப்பு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/Bavazir_network/status/2091794135950803135/video/2
கணவன், குழந்தைகள் இன்றி தனிமையில் வாழ்ந்து வந்த அந்த முதியவருக்குச் சொந்தமான பணத்திற்கு அவரது சகோதரர்களும் உரிமை கோர மறுத்துவிட்டனர். எளிய முறையில் பிச்சை எடுத்து வாழ்ந்த ஒருவரிடம் இவ்வளவு பெரிய தொகையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அப்பணத்தை மசூதிக்கு நன்கொடையாக வழங்கிட அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
