Uncategorized
சசிகலா – டிடிவி தினகரன் மீண்டும் இணைகிறார்களா?.. EPS எடுக்கப்போகும் அந்த ‘ஒரே’ முடிவு.. அதிமுகவில் அடுத்த ‘மெகா’ திருப்பம்..!!
தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை சமாளிக்கவும், கட்சியின் சரிந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிமுக நிர்வாகிகளிடையே மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளன. கடந்தகாலத் தேர்தல் பின்னடைவுகளுக்கு இவர்களின் பிரிவால் ஏற்பட்ட வாக்குச் சிதறலே முக்கியக் காரணம் என்பதை உணர்ந்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், மாவட்டச் செயலாளர்களும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த இணைப்பிற்காகத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியின் பலம் மற்றும் பிற அரசியல் சக்திகளின் எழுச்சியை எதிர்கொள்ள அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாக இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை முழுமையாக மீட்டெடுக்கச் சசிகலா மற்றும் அமமுகவின் ஆதரவு மிக முக்கியமான காரணியாக இருக்கும்.
அதனை தொடர்ந்து வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற இந்த இணைப்பைத் தவிர வேறு வழியில்லை என்றும் தலைமைக்கு எடுத்துரைத்து வருகின்றனர். ஏற்கனவே “அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முழுமையான வெற்றி கிடைக்கும்” எனச் சசிகலாவும், தொண்டர்களின் விருப்பப்படியே அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என டிடிவி தினகரனும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். இருப்பினும், இவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி இதுவரை கடுமையான எதிர்ப்புக் கொள்கையையே கையாண்டு வருகிறார். தற்போதைய தேர்தல் நெருக்கடி மற்றும் முக்கிய நிர்வாகிகளின் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில், அவர் தனது ஒற்றைத் தலைமை நிலைப்பாட்டைத் தளர்த்திப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிப்பாரா அல்லது தனது முடிவில் உறுதியாக நிற்பாரா என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
