“புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு தவெக-வில் இணைகிறேன்” நேற்று போலவே இன்றும்…. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு தவெக-வில் இணைகிறேன்” நேற்று போலவே இன்றும்…. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிவிப்பு..!!

Published

on

முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகருமான சி.விஜயபாஸ்கர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புரட்சித்தலைவியின் ஆசியோடும், புதுக்கோட்டை மக்களின் பேரன்போடும், விராலிமலை மக்களின் பேராதரவோடும், நாளை (ஜூலை 2) தவெகவில் இணைகிறேன்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேற்று போலவே… இன்று இன்னும் உறுதியாக.. நாளை இன்னும் வலிமையாக.. மண்ணுக்கான.. மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பரவலாக அறியப்பட்ட சி.விஜயபாஸ்கர், தற்போது தவெகவில் இணைவது அக்கட்சிக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. ஜூலை 2-ஆம் தேதியான இன்று அவர் முறைப்படி தவெகவில் இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in