Uncategorized
வீட்டில் தனிமையில் மனைவி… தினமும் நள்ளிரவில் கதவை தட்டும் வாலிபர்… “அந்த ஒரு போன் கால்” என் மனைவி இறந்தது எப்படி..? அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் மகேந்திரன் கடந்த ஓராண்டாகக் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால், சொர்ணலதா தனது குழந்தைகளுடன் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அதே ஊரைச் சேர்ந்த வசந்த் (32) என்ற வாலிபர், கடந்த சில மாதங்களாகச் சொர்ணலதாவுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டுவது, அத்துமீறி நுழைய முயல்வது, வழியில் செல்லும்போது பாலியல் சைகைகளைக் காட்டுவது என வசந்தின் அத்துமீறல்கள் நீடித்துள்ளன. கடந்த மாதம் வசந்த் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தபோது, சொர்ணலதா மிளகாய்ப் பொடி தூவியும் கத்தியைக் காட்டியும் அவரை விரட்டியடித்துள்ளார்.
வசந்தின் தொடர் தொல்லைகளால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகச் சொர்ணலதா தினந்தோறும் கோவையில் உள்ள தன் கணவரிடம் தொலைபேசியில் அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி மாலை 4:30 மணியளவில் சொர்ணலதா தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக உறவினர்கள் மகேந்திரனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பதறியடித்து ஊருக்கு வந்த மகேந்திரன், தனது மனைவியின் மர்ம மரணத்திற்கு வசந்தின் பாலியல் தொல்லைகளும் அச்சுறுத்தல்களுமே முக்கியக் காரணம் எனச் சந்தேகிப்பதாகக் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கணவன் அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் சொர்ணலதாவின் மரணத்தைச் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சொர்ணலதா கடைசியாகப் பயன்படுத்திய மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதன் அழைப்புப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து வருகின்றனர். இக்கொலை அல்லது தற்கொலை மிரட்டல் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான வசந்தைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
