Uncategorized
“உங்க கால்ல கூட விழுகிறேன் மேடம், எங்களைக் காப்பாத்துங்க” வேலூர் ஆட்சியர் காலில் விழுந்து விவசாயி கதறிய பகீர் காட்சி..!!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி ஜெயசாமி என்பவர் ஆட்சியர் லீலா அலெக்ஸ் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக நதியில் தடுப்பணை கட்டியும், விதிமீறி இயங்கும் 12 கல்குவாரிகளை மூடியும், நிலத்தடி நீரை பாதுகாக்கக் கோரி அவர் இந்த அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏரிகள் வறண்டு, ஆடு மாடுகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வறட்சிக்கு, தனியார் கல்குவாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த இரு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், கடுமையான கோடை வெப்ப சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் கல்குவாரிகளுக்குச் சீல் வைக்க வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதிகாரிகளின் செயல்பாடு குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
