Uncategorized
“ஒழுங்கா படிச்சிட்டு வாங்கன்னு” உச்சநீதிமன்றம் மண்டையில் குட்டியது மறந்துபோச்சா..? வினை விதைத்தவன் வினைகளை அறுவடை செய்வான்… திமுகவை கிழித்தெடுத்த தவெக ஐடி விங்..!!
தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதல் முற்றியுள்ள நிலையில், “நீதிநெறி மறந்து அரசியல் வெண்டிங் மெஷினாக மாறியுள்ள திமுக, தான் விதைத்து வரும் வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது” எனத் தமிழக வெற்றிக் கழகம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திமுக மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிகமான முறையில் அரசியல் புரிந்து வருவதாகத் தவெக குற்றம் சாட்டியுள்ளது. தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வரும் திமுக, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படுவதாகவும், மக்களை மறந்து ‘தான்’ என்ற திமிரிலும் அதிகார மமதையிலும்தான் அராஜகம் செய்து வருவதாகவும் சாடியுள்ளது. மேலும், காவல் துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடும் திமுக தலைவருக்குச் சத்திய ஆட்சி எது, சாத்தானின் ஆட்சி எது என்பது நன்றாகவே தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதற்காக, “ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள்” என்று உச்ச நீதிமன்றம் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டுத் திமுகவினர் தற்போது ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டதாகத் தவெக விமர்சித்துள்ளது. அரசியலை ஒரு தூய்மையான சேவையாகப் பார்க்காமல் வெறும் வியாபாரமாக மட்டுமே செய்து வரும் திமுக, தற்போது தாங்கள் செய்த தவறுகளுக்கான விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தவெக சுட்டிக்காட்டியுள்ளது
