அடக்கடவுளே..! 5 வயது சிறுவனை 8 நிமிடங்கள் சரமாரியாக தாக்கிய கிளாஸ் மானிட்டர்… வகுப்பறை சிசிடிவி காட்சிகளால் அம்பலமான அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! 5 வயது சிறுவனை 8 நிமிடங்கள் சரமாரியாக தாக்கிய கிளாஸ் மானிட்டர்… வகுப்பறை சிசிடிவி காட்சிகளால் அம்பலமான அதிர்ச்சி..!!

Published

on

லக்னோவில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், ஐந்து வயது எல்.கே.ஜி மாணவன் ஒருவன் அவனது வகுப்புத் தலைவியால் வகுப்பறைக்குள் சுமார் எட்டு நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று வகுப்பறையில் 18 மாணவர்களுடன் இருந்த ஆசிரியர், அனைவரையும் மேஜை மீது தலை குனிந்து இருக்குமாறு கூறிவிட்டு, அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை வகுப்புத் தலைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆசிரியர் சென்ற சில நிமிடங்களில், பாதிக்கப்பட்ட மாணவன் தலையை உயர்த்தியதால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி, அவனைத் தொடர்ந்து கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளார். வலியால் அழுத அந்த மாணவன் வகுப்பறையை விட்டு வெளியே ஓட முயன்றபோது, அவனைக் தடுத்து நிறுத்தி, கதவைப் பூட்டிவிட்டு மீண்டும் தாக்கியுள்ளார். மற்ற மாணவர்கள் பயந்து போய் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அந்த சிறுமி மாணவனை அவனது இருக்கைக்கு இழுத்துச் சென்று தொடர்ந்து தாக்கியுள்ளார். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஆசிரியர் திரும்பி வந்தபோது, பாதிக்கப்பட்ட மாணவன் அவரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisement

https://twitter.com/HateDetectors/status/2078099901301633307/video/1

மாலை வீட்டிற்குத் திரும்பிய சிறுவனின் முகம் வீங்கிப்போய், காயங்களுடன் இருப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகப் பள்ளிக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோதுதான் இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in