“என் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செஞ்சிட்டு அப்புறம்” 8 ஆண்டு காதல் துரோகம்… காதலனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் பெண் பொறியாளர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“என் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செஞ்சிட்டு அப்புறம்” 8 ஆண்டு காதல் துரோகம்… காதலனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் பெண் பொறியாளர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

Published

on

குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் அத்தகல்லா கீர்த்தி, தனது நீண்ட கால காதலன் மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டதை அறிந்து மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். கீர்த்தியும், பிரகாசம் மாவட்டம் தங்குதூர் மண்டலத்தைச் சேர்ந்த பாப்பினேனி சாய் என்பவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாய் தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதால் மனமுடைந்த கீர்த்தி, ஜூலை 14 அன்று தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் இதுகுறித்து பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார். மேலும், சாய் தன் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து மங்களசூத்திரம் கட்ட வேண்டும் என்று அவர் எழுதிய உருக்கமான கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது உடலுடன் பெற்றோரும் உறவினர்களும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சாயின் வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாய் ஏமாற்றியதே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய அவர்கள், கீர்த்தியின் கடைசி ஆசையை நிறைவேற்றக் கோரி சாயின் வீட்டின் பூட்டை உடைத்து உடலை உள்ளே வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in