LATEST NEWS
CM சார் காவல்துறை உங்க கட்டுப்பாட்டுல இல்லையா..? உங்களை சுத்தி இருக்கும் ரீல்ஸ் மாஃபியாக்கள் கையில் உள்ளதா.? முதல்வர் விஜய்யை கிழித்தெடுத்த அப்பாவு..!!
நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்ததோடு, அவர் எந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று அப்பாவு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். காவல் உளவுத்துறைத் தலைவர் கூட முதலமைச்சரைச் சந்திக்க முடியாமல் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் முக்கியத் தூணான பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கத் துடிக்கும் முதலமைச்சருக்குத் தனது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “முதலமைச்சர் அவர்களே, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் ரீல்ஸ் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?” என்று மிகக் கடுமையான கேள்வியைச் சாடியுள்ளார். பத்திரிகையாளர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், ஊடகத் துறையினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
