LATEST NEWS
“பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” இரவோடு இரவாக நடந்த கைது சம்பவம்… ஆனா ஏன் அவங்கள மட்டும் கைது பண்ணல.? திமுக பிரந்தாமன் அடுக்கடுக்கான கேள்வி..!!
“பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” என்று திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்த நிலப்பதிவைக்கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது என்றும், தவெக அரசு அதனைச் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்துப் பேசியவர்களை மட்டும் இரவோடு இரவாகக் காவல்துறையினர் கைது செய்துள்ளதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், அந்த நிலத்தை விற்றவர்களையும் மற்றும் வாங்கியவர்களையும் ஏன் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இந்த முறைகேடான நிலப்பதிவு விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து பரந்தாமன் பேசியுள்ள இந்த பேச்சு, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
