LATEST NEWS
“என்னது!.. ரயிலில் பேய்களா?.. அலறி அடித்து ஓடிய பெண் பயணி.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ”…!!
வாலிபர்களின் அட்டகாசமான குறும்பு வீடியோக்கள் இன்றைய சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சின்னச் சின்ன கேலிகள், எதிர்பாராத தமாஷான சூழ்நிலைகள் மற்றும் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் குறும்புத்தனங்கள் இந்த வீடியோக்களின் முக்கிய அம்சங்களாகும். இந்நிலையில் ரயிலில் ஒரு பெண் பயணி தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, அதிகாலை 5:15 மணி இருக்கும், நான் அஜ்மீரிலிருந்து பரத்பூருக்கு ரயிலில் பயணம் செய்வதற்காக ஏசி பெட்டியான ‘B-3’ கோச்சிற்குள் நுழைந்தேன். அப்போது உள்ளே காலடி எடுத்து வைத்த நொடியில், அங்கே தெரிந்த ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு மரண பயத்தில் அலறித் துடித்தேன். பயத்தில் என் தொண்டை வறண்டு போக, அலறியடித்துக்கொண்டு பெட்டியை விட்டு வெளியே ஓடி வந்தேன். என் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து என்னிடம் என்னவென்று விசாரித்தனர்.
समय सुबह के 5:15 का समय 👻
मैं आज Train से अजमेर To भरतपुर का सफर करने के लिए जैसे ही ट्रेन AC कोच में चढ़ी और देखा ,
B -3 कोच का ऐसा नजारा देखा 😱
तो मैं ये सब देखकर डर ही गई और मेरी तो चीख ही निकल गई और कोच से बाहर आ गई उसके बाद आसपास के लोग दौड़ कर आए।
उन्होंने पूछा क्या… pic.twitter.com/TRHUiwjuZt— Geeta Alwar (@Geeta_Alwar_02) July 17, 2026
நடுங்கும் குரலில், “கோச்சிற்குள் பேய்கள் அமர்ந்திருக்கின்றன!” என்று நான் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அனைவரும் உள்ளே சென்று பார்த்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அது நிஜமான பேய்கள் அல்ல, அங்கிருந்த சில குறும்புக்கார இளைஞர்கள் சக பயணிகளை பயமுறுத்துவதற்காக பேய் வேடமிட்டு வேடிக்கை விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். உண்மை தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், அதிகாலை நேரத்தில் அப்படி ஒரு கோரமான காட்சியை திடீரெனப் பார்த்தால் யாருக்குத்தான் நெஞ்சு துடிக்காது.
