“பாசிசம்னு சொன்னீங்க, இப்ப பாயாசமா?” தவெக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி குட்டு.. சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாசிசம்னு சொன்னீங்க, இப்ப பாயாசமா?” தவெக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி குட்டு.. சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!!

Published

on

சென்னை உயர் நீதிமன்றம் சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது . கலவரத்தைத் தூண்டுதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, தேவையெனில் அவதூறு வழக்குகளை மட்டுமே தொடர முடியும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது . கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலான இந்த உத்தரவு, அண்மைக்காலமாகக் கருத்துப் பதிவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தவெக அரசை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் . “ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்குவது பாசிசம் என்று விமர்சித்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் செய்வது என்ன பாயாசமா?” என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் . தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தற்போதைய செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசுக்கு எதிரான கண்டனங்கள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவி வருகின்றன.

Advertisement

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அடக்குமுறையைக் கையாள்வதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு ஒரு முக்கிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது . இதனால் இனிவரும் நாள்களில் சமூக வலைத்தளப் பதிவுகள் மீதான அரசின் அணுகுமுறையிலும், காவல்துறையின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in