LATEST NEWS
“தவழ்ந்து போய் நாற்காலியை பிடிச்சவங்க எல்லாம்…” இப்போ பல்லைக் காட்டி சிரிக்குது… எடப்பாடியை ‘டேமேஜ்’ செய்த த.வெ.க. ஐடி விங்க்..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஜைக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் தற்போதைய ஆட்சியைப் பார்த்துப் பழிப்பது, கொடநாடு எஸ்டேட் மரங்களும் அங்கு நடந்த மர்மங்களும் பல்லைக் காட்டிச் சிரிப்பது போல் உள்ளது என்று அதில் கடுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் துரித நடவடிக்கை எடுக்கும் மனசாட்சியுள்ள மக்களாட்சியை, அதிகார வெறி மற்றும் ஆற்றாமையில் தீய்ந்துபோன சக்திகள் இழித்துப் பேசுவதாக அந்தப் பதிவில் சாடப்பட்டுள்ளது. பழனி விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியிருப்பது கூடத் தெரியாமல், எடப்பாடி பழனிசாமி பத்தாம்பசலித்தனமாக அரசியல் அறிக்கை விடுவது ஏன் என்றும் த.வெ.க ஐடி விங்க் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், பதவி மற்றும் பவிசுக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த ‘மற்றும் பலர்’ தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசைப் பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரும் நகைச்சுவை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள், ரீல்ஸ் பற்றிப் பேசி ஃபீல் ஆகி அழுதாலும், இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த இந்த அரசை, ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று த.வெ.க ஐடி விங்க் தனது பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
