“நான் சீப்பான அரசியல் பண்ண வரல” 1969-ல் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதிச்சது யார்..? காவிரியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் ஒரு துளி கூட இல்ல… சட்டசபையில் CM விஜய் ஆக்ரோஷம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் சீப்பான அரசியல் பண்ண வரல” 1969-ல் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதிச்சது யார்..? காவிரியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் ஒரு துளி கூட இல்ல… சட்டசபையில் CM விஜய் ஆக்ரோஷம்..!!

Published

on

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையை தவெக அரசு ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் மிகவும் திட்டவட்டமாக முழங்கியுள்ளார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த உண்மையையும் முழுமையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “கடந்த 1969 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் அனுமதி கொடுத்தது யார்? என்பது போன்ற மலிவான அரசியலை (Cheap Politics) இந்த அவையில் செய்ய நான் விரும்பவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைத் தவிர, தங்களுக்குத் துளிகூட அரசியல் சுயலாபம் தேடும் எண்ணம் இல்லை” என்றும் மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்தார்.

Advertisement

அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் சட்ட ரீதியாகப் போராடுவதோடு மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாகத் தொடரும் இந்தக் காவிரிப் பிரச்சினைக்கு ஏதேனும் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துவிடாதா என்ற ஒற்றை நல்லெண்ணத்தின் காரணமாகவே தான் பெங்களூரு சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதாகத் தனது உரையில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சரின் இந்த அதிரடி உரை பேரவையில் ஒலித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in