LATEST NEWS
நீ எங்க இருந்து வர்ற..? இனவெறியால் இந்தியரை மிரட்டி… போலீஸைக் கூப்பிட்ட ஜப்பான் கடை முதலாளி… ஆனா கடைசியில் நடந்த மாஸ் ட்விஸ்ட்..!!
ஜப்பானின் ஷிஸுவோகா மாகாணத்தில் உள்ள 7-Eleven கடையில், ‘அனந்த்’ என்ற இந்திய சுற்றுலாப் பயணிக்கு இனவெறித் துன்புறுத்தல் நேர்ந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். ஷிஸுவோகாவில் தனது பயணத்தின் கடைசி நாளில், அவர் வாங்கிய உணவைச் சூடாக்கித் தருமாறு கடையில் இருந்த நேபாள ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் சம்மதித்த நிலையில், திடீரென அங்கு வந்த கடையின் மேலாளர் அனந்திடம் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.
அந்த உரிமையாளர் அனந்திடம் அவருடைய தாய்நாடு எது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் “நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்” என்று கூறியதும், அவர் மீது கோபப்பட்டுக் கத்தியதுடன் இனவெறி சார்ந்த கருத்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் அனந்த் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காவல்துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். நிலைமை தீவிரமடைந்ததால், அனந்த் ஆதாரத்திற்காக நடப்பவற்றைத் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தார். விரைந்து வந்த ஜப்பான் காவல்துறை, வீடியோ ஆதாரங்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து அனந்த் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை உறுதிசெய்தது. அனந்திடம் மரியாதையுடன் நடந்து கொண்டு மன்னிப்பு கோரிய காவல்துறை, தவறாகப் புகாரளித்த கடை உரிமையாளரைக் கடுமையாகக் கண்டித்தது.
https://www.instagram.com/reel/DbnnNY-T59f/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வெளிநாட்டுப் பயணிகளிடம் நடக்கும் இனவெறி குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜப்பான் காவல்துறையின் நியாயமான மற்றும் கண்ணியமான நடவடிக்கையைப் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும், தனக்கு ஆதரவாக உண்மையைச் சொன்னதால் அந்த நேபாள ஊழியர் தனது வேலையை இழந்திருக்கக்கூடும் என்றும் அனந்த் கவலை தெரிவித்துள்ளார். காவல்துறையும் கடை உரிமையாளரும் தன்னை அந்த ஊழியருடன் பேச அனுமதிக்கவில்லை என்றாலும், உண்மையின் பக்கம் நின்ற அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
