முதல்வர் தேடிப் போய் அவமானப்படக் கூடாது.. கர்நாடகாவிடம் மண்டியிட தேவையில்லை… சட்டசபையில் சிபிஎம் எம்எல்ஏ அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல்வர் தேடிப் போய் அவமானப்படக் கூடாது.. கர்நாடகாவிடம் மண்டியிட தேவையில்லை… சட்டசபையில் சிபிஎம் எம்எல்ஏ அதிரடி..!!

Published

on

காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உறுப்பினர் செல்லசாமி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய சிபிஎம் உறுப்பினர் செல்லசாமி, தமிழகத்தின் வாழ்வாதார உரிமையான காவிரி நீரைப் பெறுவதற்காகக் கர்நாடக அரசிடம் தேடிச் சென்று மண்டியிட வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியான போராட்டங்கள் மூலமாகவே நாம் நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றும், அதை விடுத்து மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசை முதலமைச்சர் தேடிச் சென்று அவமானத்தைச் சந்திக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

மேலும், இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியில் முதலமைச்சருக்கு ஏதேனும் அவமானம் நேரிட்டால், அது தனிப்பட்ட விஜய்க்கு நடக்கும் அவமானம் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே ஏற்படும் அவமானமாக முடிந்துவிடும் என்றும் செல்லசாமி எச்சரித்தார். எனவே, பெங்களூரு செல்லும் இந்தத் தனிப்பட்ட முடிவைக் கைவிட்டு, தமிழகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in