“அடப்பாவமே.. நடத்துநருக்கே ‘விபூதி’ அடிக்க பார்த்த பெண்.. பேருந்துக்குள் நடந்த பகீர் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவமே.. நடத்துநருக்கே ‘விபூதி’ அடிக்க பார்த்த பெண்.. பேருந்துக்குள் நடந்த பகீர் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Published

on

பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் நேற்று காலையில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ‘கே.ஏ.57 எப் 6331’ எண் கொண்ட மாநகர பேருந்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிவிட்டு, தனது பணப்பை மற்றும் அலுவலகப் பையை ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் பாதுகாப்பாக வைத்தார். பின்னர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பதற்காக அவர் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது பையைக் காணவில்லை. அங்கிருந்த பெண் ஒருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த நடத்துநர் அவரிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். இதையடுத்து, ஓட்டுநர் உடனடியாக அங்கு வந்த போக்குவரத்து காவலரின் உதவியுடன் சோதனையிட்டபோது, அந்தப் பெண்ணின் பைக்குள் நடத்துநரின் பணப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மாட்டிக்கொண்ட அந்தப் பெண், யாரோ தனது பைக்குள் இந்த பையை வைத்துவிட்டதாகக் கூறி தப்பிக்க முயன்றார். தனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பிள்ளைகள் தனக்காகக் காத்திருப்பதாகவும் கூறி, கதவைத் திறந்து தன்னை இறக்கிவிடுமாறு ஓட்டுநரிடம் அழுது கெஞ்சினார். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் கதவைத் திறக்காமல், போக்குவரத்து காவலரின் உதவியுடன் அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்துக்குள் நடந்த இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in