LATEST NEWS
உலகப்போரின் உச்சகட்டம்..! அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த மரண அடி… நடுவானில் சுக்குநூறான அமெரிக்க ட்ரோன்..! பதறவைக்கும் பின்னணி..!!!
ஈரானின் அஹ்வாஸ் நகரில் உள்ள சாஹித் பகாயி குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல் காரணமாக, மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், “மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களைப் போல இந்த தாக்குதல் அமைந்துள்ளது” என்று குற்றம் சாட்டியதோடு, உயிருக்காகப் போராடும் அப்பாவி குழந்தைகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தியுள்ள இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான போர்க்குற்றம் என்றும் விமர்சித்துள்ளார்.
சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ள ஈரானின் இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தே இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தீவிரத் தாக்குதல்களில், ஈரானிய இராணுவ முகாம்களும் சேதமடைந்தன. இதில் குறைந்தது 7 வீரர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் துறைமுகங்களின் கடல்வழி முற்றுகையை உடைக்க முயன்ற ஒரு வெற்று எண்ணெய் கப்பலையும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி முடக்கியுள்ளன.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியது. மேலும், அண்டிமேஷ்க் நகருக்கு மேலே பறந்த அமெரிக்காவின் அதிநவீன எம்.க்யூ-9 ரக ட்ரோன் விமானத்தை தங்களின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வராத போதிலும், இந்த தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
