LATEST NEWS
TNPSC குரூப்-1 தேர்வு தேதி திடீர் மாற்றம்.. காலையிலேயே தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதியை மாற்றியமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்தத் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதியின்படி, இத்தேர்வானது வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூலை 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென குரூப்-1 முதன்மைத் தேர்வின் தேதி மாற்றப்பட்டதற்கான தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமான காரணங்கள் எதையும் தேர்வாணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், தேர்வுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் தங்களது திருப்புதலை மேற்கொள்வதற்குக் கூடுதலாகச் சில நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மத்தியில் பெரும் பர பரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
