அன்று சசிகலா… இன்று ஏ.வ.வேலு…! எதிராளிகளையும் வியக்கவைக்கும் ஏ.வ.வேலுவின் ராஜ தந்திரம்… உதயநிதி – ஆதவ் அர்ஜுனா பஞ்சாயத்தை முடித்து வைத்ததே இவர் தானாம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்று சசிகலா… இன்று ஏ.வ.வேலு…! எதிராளிகளையும் வியக்கவைக்கும் ஏ.வ.வேலுவின் ராஜ தந்திரம்… உதயநிதி – ஆதவ் அர்ஜுனா பஞ்சாயத்தை முடித்து வைத்ததே இவர் தானாம்…!!

Published

on

தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களைத் தணித்து, இருதரப்பிற்கும் இடையே இணக்கமான பாலமாகச் செயல்படும் தலைவர்கள் உருவாவது காலத்தின் வழக்கம். முந்தைய காலத்தில் மறைந்த தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா இடையிலான உச்சகட்ட அரசியல் முரண்களின் போது, பின்னணியில் இருந்து உறவுப் பாலமாக சசிகலா செயல்பட்டதாகக் கூறப்பட்டதைப் போல, தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு அந்தப் பங்கைத் திறம்பட வகிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

தவெக – திமுக இடையிலான சமீபத்திய காரசாரமான கருத்து மோதல்கள் முதற்கொண்டு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தின் முக்கிய அரசியல் நகர்வுகள் வரை, களத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு ஏ.வ.வேலு சுமுகமான தீர்வுகளைச் சாத்தியமாக்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

குறிப்பாக, உதயநிதி – ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் – ஜே.டி.ராஜேந்திரன் இடையிலான கருத்து வேறுபாடுகளின்போதும், இருதரப்பினரையும் நேரில் அழைத்துச் பேசி சமாதானம் செய்து வைத்ததில் ஏ.வ.வேலுவின் ராஜதந்திர நகர்வுகளே பிரதானப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in