LATEST NEWS
நாதகவிலிருந்து மேலும் ஒரு முக்கிய புள்ளி விலகல்… காலையிலேயே சீமானுக்கு அதிர்ச்சி..!!
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறைச் செயலாளரான சி. சங்கர் தனது கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார். குறிப்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னின்று நடத்தி, பல வழக்குகளைக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் சங்கரும் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் இச்சூழலில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டப்பிரிவு தூண்கள் அடுத்தடுத்து விலகி வருவது நாம் தமிழர் கட்சி வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
