“அங்கிள் விட்ருங்க” கதறிய 4 வயது பிஞ்சுக் குழந்தை.. தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும்போது.. வேன் டிரைவர் செய்த கொடூரம்… மருத்துவ பரிசோதனையால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“அங்கிள் விட்ருங்க” கதறிய 4 வயது பிஞ்சுக் குழந்தை.. தினமும் பள்ளிக்கு சென்று திரும்பும்போது.. வேன் டிரைவர் செய்த கொடூரம்… மருத்துவ பரிசோதனையால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 4 வயது நர்சரிப் பள்ளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அக்குழந்தை படித்து வரும் பள்ளியின் வேன் டிரைவரே இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளான். தினசரி குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் வழியில், அவன் இந்த கொடூரச் செயலைத் தொடர்ந்து செய்து வந்துள்ளான்.

கடந்த சனிக்கிழமை சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதை உறுதிசெய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

Advertisement

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி அந்தப் பள்ளி வேன் டிரைவரைக் கைது செய்தனர். பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in