Uncategorized
“அடப்பாவமே..” ஆசை ஆசையாய் டாட்டூ குத்திய பெண்ணுக்கு பரவிய HIV தொற்று.. பிரபல பார்லரில் நடந்த விபரீதம்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர், பிறப்புறுப்புத் தொற்று காரணமாக மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது, அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ விசாரணையில், அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லரில் பச்சை குத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்படாத அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்தியதே இந்த எச்.ஐ.வி தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம் என தோல் மருத்துவப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வேதாங்க் தெரிவித்துள்ளார். மேலும், எச்.ஐ.வியை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், வாழ்நாள் முழுவதுமான தொடர் மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத, தரம் குறைந்த டாட்டூ நிலையங்களில் பச்சை குத்திக்கொள்வது எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் மைகள் தோலில் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, சிகப்பு மற்றும் பச்சை நிற மைகள் தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கடுமையான அலர்ஜிகளை மிக எளிதாக உருவாக்கும் என்பதால், பச்சை குத்த விரும்புபவர்கள் தகுந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
