Uncategorized
ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி’ சுவாகா… “பில்கேட்ஸ்’ முதல், ” அம்பானி வரை… ‘அழுது புலம்பும் கொடுமை’.. உலக கோடீஸ்வரர்கள்’ தலையில் விழுந்த ‘பேரிடி’…?
தற்போது உலகமெல்லாம் பரவி உள்ள கொரோனா வைரஸ் பீதியால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள், ஏற்கனவே 1987-ஆம் ஆண்டு சந்த்தித்த பாதிப்பிற்கு பின்னர் தற்போது மீண்டும் அதே அளவுக்கு பெரும் இழப்பை சந்த்தித்துள்ளனர்.
இதனையடுத்து உலக கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் சுமார் 5.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர்
ஜெஃப் பெசோஸ், 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார்.
உலகின் மூன்றாவது பணக்காரரான பெர்னாடு அர்னால்டின் LVMH நிறுவன பங்குகள் 9 சதவிகிதம் குறைந்ததால் அவர் 7.7 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளார்.
Microsoft நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
அவர்களை தொடர்ந்து , ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், கூகுள் நிறுவனர்கள் லாரி பெய்ஜ், சர்ஜ பிரின், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரும் கணிசமான அளவில் தங்களது சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் அவர் ஆசிய அளவில் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த கொரானாவினால் ஒட்டு மொத்த உலக நாடுகளே மிரண்டு போய் உள்ளார்.
