மிஸ் பண்ணிடாதீங்க..! வெறும் 45 காசுகளுக்கு ₹10 லட்சம் இன்ஷூரன்ஸ்… ரயில் பயணிகளுக்கு இன்று முதல் ரயில்வே வாரியத்தின் அதிரடி ஆப்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிஸ் பண்ணிடாதீங்க..! வெறும் 45 காசுகளுக்கு ₹10 லட்சம் இன்ஷூரன்ஸ்… ரயில் பயணிகளுக்கு இன்று முதல் ரயில்வே வாரியத்தின் அதிரடி ஆப்சன்..!!

Published

on

ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நேரடியாக பயணச்சீட்டு வாங்கும் பயணிகளுக்கும் ₹10 லட்சம் வரையிலான பயணக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை ரயில்வே வாரியம் இன்று முதல் முறைப்படி தொடங்குகிறது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, இனி சாதாரண மற்றும் முன்பதிவு கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவுறுத்தலின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், பயணிகளின் கட்டாயத் தேர்வாக இல்லாமல் விருப்பத் தேர்வாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக் காப்பீட்டு வசதியைப் பெற விரும்பும் பயணிகள், தங்களின் டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக வெறும் 45 காசுகள் மட்டுமே செலுத்தினால் போதுமானது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் தேவையற்ற சில்லறைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த 45 காசுகள் காப்பீட்டுக் கட்டணத்தை பயணிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்துவதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்துள்ளது. இதன் மூலம் கவுன்ட்டர்களில் ரொக்கப் பணத்தைக் கையாள்வது குறைவதோடு, விபத்து போன்ற அவசரக் காலங்களில் பயணிகளுக்கான நிதிப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in