CRIME
“நெஞ்சே நடுங்கிப்போச்சுப்பா..!” லிஃப்டில் தனியாக இருந்த சிறுமி.. பின்னாடி நின்ற நபர் செய்த பகீர் காரியம்.. உறைய வைத்த சிசிடிவி காட்சி..!!
சீனாவில் மின்தூக்கி ஒன்றில் தனியாகச் சென்ற சிறுமி ஒருவருக்கு, மர்ம நபர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்துக் கொடூரமான முறையில் கடத்திச் செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த மின்தூக்கிக்குள் சிறுமி மட்டும் தனியாக இருந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கடத்தல்காரன், சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து, அவர் நிலைகுலைந்ததும் உடனடியாகத் தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளான்.
கடத்தப்பட்ட அந்தச் சிறுமியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதைவிடப் பேரதிர்ச்சியாக, மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடலில் இருந்த முக்கிய உறுப்புகள் அனைத்தும் கடத்தல் கும்பலால் கொடூரமாகத் திருடப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலமானது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், குழந்தைகளைக் தனியாக அனுப்பும் பெற்றோர்களிடையே கடுமையான பயத்தையும், இத்தகைய கடத்தல் மாஃபியாக்களுக்கு எதிரான பெரும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
