LATEST NEWS
“இப்படியும் ஒரு முட்டாள் தந்தையா..?” 5 வயது சிறுவனை வச்சு நடுரோட்டில் செஞ்ச காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொதிக்கவிட்ட வைரல் வீடியோ..!!
நெடுஞ்சாலையில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஒரு தந்தை அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இருசக்கர வாகனம் மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வது போலத் தோன்றும் அந்த காட்சியில், சிறுவனின் கைகள் மட்டுமே வாகனத்தின் ஹேண்டில்பாரை பிடித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், குழந்தையின் கைகளோ அல்லது உடல் சமநிலையோ ஒரு நொடி தவறினாலும், இருவரின் உயிரைக் கூட யாராலும் காப்பாற்ற முடியாத அளவுக்குப் பெரும் விபரீதம் நேரிடும் அபாயம் உள்ளது.
குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சிக்காகவும், சமூக ஊடகங்களில் விளம்பரத்தைத் தேடவும் இது போன்ற ஆபத்தான காரியங்களைச் செய்வது முற்றிலும் முட்டாள்தனமான செயலாகும். எந்தவொரு பொறுப்புள்ள மற்றும் புத்திசாலியான பெற்றோரும் தனது பிள்ளையின் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய பொறுப்பற்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். சாலைப் பாதுகாப்பு விதிகளை மதிக்காமல், பச்சிளம் குழந்தையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய இந்தத் தந்தையின் வீண் சாகச முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
