“ஓண்டுபச்சை வளைவில் காத்திருந்த எமன்.. கார் ஓட்டுநர் செய்த ‘அந்த’ தவறு.. பைக்குடன் தூக்கி வீசப்பட்டு 2 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!1 – cinefeeds
Connect with us

CRIME

“ஓண்டுபச்சை வளைவில் காத்திருந்த எமன்.. கார் ஓட்டுநர் செய்த ‘அந்த’ தவறு.. பைக்குடன் தூக்கி வீசப்பட்டு 2 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!1

Published

on

கேரள மாநிலம் குளத்துப்புழா அருகே உள்ள ஓண்டுபச்சை வளைவில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்திரன் பிள்ளை மற்றும் ஜாஃபர் ஆகிய இருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மலையோரப் பாதையான இப்பகுதியில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தில், பைக்குடன் சேர்த்து இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுநர் தூங்கியதே இந்தத் துயரமான விபத்துக்குக் காரணம் என்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு காரணமாக ஓட்டுநர் கண் அயர்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது பலமாக மோதியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள குளத்துப்புழா போலீசார், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in