CRIME
“இது என்ன கொடுமை.. அம்மாவின் 2 வது திருமணம்.. ஆத்திரத்தில் மகன் நடத்திய கொலை வெறித்தாக்குதல்.. தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், தாயின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரமடைந்த வளர்ப்பு மகன், தனது மாமன் மகனுடன் சேர்ந்து 30 வயதான தொழிலதிபர் நவ்ஜோத் சிங்கை சுட்டுக்கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில், நவ்ஜோத் சிங் தனது கடையில் அமர்ந்திருந்தபோது, காரில் வந்த இரு முகமூடி அணிந்த நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டுகள் பாய்ந்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பின்னர் கொலையாளிகள் காரில் தப்பியோடினர். இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட நவ்ஜோத் சிங்கின் தந்தை நிஷான் சிங், தனது மகனின் வளர்ப்பு மகனான அவ்தீப் மற்றும் அவனது மாமன் மகன் ராஜன் தீப் ஆகியோரே இக்கொலையைச் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். நியூசிலாந்தில் வசித்து வந்த அவ்தீப், தனது தாயின் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து நாட்களுக்கு முன்பு இந்தியா வந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வளர்ப்பு மகன் அவ்தீப், அவரது சகோதரர் மற்றும் ராஜன் தீப் உட்பட ஏழு பேர் மீது மிலக் கானம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
