அடச்சீ.. அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. தட்டிக் கேட்ட காதல் கணவனுக்கு மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. தட்டிக் கேட்ட காதல் கணவனுக்கு மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கோடா பகுதியில், தையல் தொழிலாளியான அன்சுல் என்பவரைக் கொலை செய்ய அவரது மனைவி நிஷா திட்டமிட்டுக் கச்சிதமாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்கிம்பூரைச் சேர்ந்த அன்சுல், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஷாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு கோடா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அன்சுல் இரவுப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதே கட்டிடத்தில் வசித்து வந்த அவரது அக்காவின் கணவருடன் நிஷாவிற்குத் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவர்களது வாட்ஸ்அப் அரட்டைகள் மூலம் இந்த ரகசியம் அன்சுலுக்குத் தெரியவந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த நிஷா தனது கள்ளக்காதலனைத் தூண்டிவிட்டு அன்சுலைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

கொலைக்கு விபரீதத் திட்டம் தீட்டிய நிஷா, அன்சுல் இறந்த பிறகு காவல்துறையினரைத் திசைதிருப்பப் பெரும் நாடகமாடினார். வீட்டு உரிமையாளருக்கு 10 மாத வாடகை பாக்கி தர வேண்டியிருந்ததாகவும், அதனால்தான் அவர் அன்சுலைக் கொலை செய்துவிட்டார் என்றும் கூறி தனது கள்ளக்காதலனைக் காப்பாற்ற முயன்றார். அத்துடன் காவல்துறையினர் முன்னிலையில் அவர் அழுது நடித்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நிஷாவின் பொய் நாடகம் அம்பலமாகி, அவரும் அவரது கள்ளக்காதலனும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in