LATEST NEWS
நாங்க பேரம் பேசல… சிறுத்தைகள் மடியில் வந்து அவங்களாவே விழுந்துட்டாங்க… கூட்டணி குறித்து திருமாவளவனின் ஆக்ரோஷப் பேச்சு… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
“நாங்களே வந்து அமைச்சரவையில் சேருகிறோம் என்று சொல்லவில்லை, தூது அனுப்பவில்லை, பேரம் பேசவில்லை; பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக கூட்டணி அரசு உருவாகி சிறுத்தைகளின் மடியிலேயே வந்து விழுகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, திருமாவளவனின் இந்த அதிரடிப் பேச்சு மிகவும் உற்றுநோக்கப்படுகிறது.
தங்களின் இந்த அரசியல் நிலைப்பாடு குறித்து மேலும் விரிவாகப் பேசிய அவர், தாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை என்றும், வரும் காலங்களில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாகவே மாறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என்பது தற்போதைய அரசியல் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகி வருவதாகவும், அது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகத் தானாகவே சிறுத்தைகளின் மடிக்கு வந்து சேரும் என்றும் அவர் தனது தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
