“சாதாரண வாட்ஸ்அப் சாட் மூலம் சப்ளை…” ஆடம்பர வீடுகள், கோடிகளில் சொத்துக்கள்..! கொடிகட்டிப் பறந்த ஜோடியின் பகீர் தில்லாலங்கடி வேலை அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சாதாரண வாட்ஸ்அப் சாட் மூலம் சப்ளை…” ஆடம்பர வீடுகள், கோடிகளில் சொத்துக்கள்..! கொடிகட்டிப் பறந்த ஜோடியின் பகீர் தில்லாலங்கடி வேலை அம்பலம்..!!

Published

on

மும்பையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளியான சலீம் டோலா என்பவருடன் இணைந்து மாதம் தோறும் சுமார் 80 கிலோ மெஃபெட்ரோன் எனப்படும் போதைப் பொருளைக் கடத்தி விற்று வந்த ஃபைசல் ஷேக் மற்றும் அவரது மனைவி அல்ஃபியா ஆகிய தம்பதியினர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்அப் வழியாக ஆர்டர்களைப் பெற்று ஜே.ஜே மருத்துவமனை அருகே போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

இவ்வாறு போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த சுமார் ரூ.10.62 கோடி கருப்புப் பணத்தை, போலியான நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளனர். அனுமதி பெறப்படாத கட்டிடங்களின் 21வது மாடியில் ரூ.2.2 கோடி மதிப்பில் இரண்டு சொகுசு வீடுகள், மசகானில் ரூ.2.5 கோடி மதிப்பில் பிளாட், பல கிலோ தங்க நகைகள் மற்றும் ஆடம்பர கார்களை வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.5.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் முடக்கித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in