LATEST NEWS
எதுக்குப்பா இந்த வெறி..! பாவம் அந்த வாயில்லா ஜீவன்… தெரு நாயை அடித்துக் கொன்ற கொடூரன்.. நடவடிக்கை எடுக்கக் கோரி கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தெரு நாய் ஒன்று மிருகத்தனமாகத் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேச முடியாத அந்த வாயில்லா ஜீவன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
PCA சட்டம் 1960 மற்றும் BNS பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி FIR பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மனிதநேயமற்ற இந்தச் செயலுக்கு நீதி வழங்கக் கோரி விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
