LATEST NEWS
சூரியனும் சனியும் சேர்ந்துட்டாங்க… இனிமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு கையில் பணமும்… வேலையில் பிரமோஷனும் உறுதி..! உங்க ராசி இதுல இருக்கா..?!
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சனி மற்றும் சூரியனால் நவபஞ்ச திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது. பொதுவாக சூரியனும், சனியும் எதிர்மறை உறவு கொண்ட கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சூரியன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் அதிகாரத்தையும், சனி ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் நீதியையும் குறிக்கின்றன. ஜோதிடக் கணிப்பின்படி, இரண்டு கிரகங்கள் 5 மற்றும் 9 ஆம் வீடுகளில் இருக்கும் போது இந்த நவபஞ்ச திருஷ்டி யோகம் உருவாகிறது.
இந்த யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைந்து, தன்னம்பிக்கை அதிகரித்து, வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதுடன் வருமானம் அதிகரித்து, வேலை மாற்றம் நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
மேலும், மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலனாக வேலையிடத்தில் முன்னேற்றம், சம்பள உயர்வு, புதிய தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, சிக்கிய பணம் திரும்பக் கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், காதல் மற்றும் கல்வியில் சிறப்பான முன்னேற்றமும் உண்டாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
