CINEMA
“ஆசிரியர்களே மாறிட்டாங்க.. ஆனா நான் மாறல..” ஒரே பள்ளியில் தொடர்ந்து 35 ஆண்டுகளாக கலந்துகொள்ளும் சைப் அலிகான்..! அரங்கத்தையே சிரிக்க வைத்த நடிகர்..!!
பாலிவுட் நடிகர் சைப் அலிகான் தான் 20 வயதிலிருந்து தற்போது 55 வயது வரை ஒரே பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவதாக நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். பிரபல ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் தனது மனைவி கரீனா கபூருடன் கலந்துகொண்ட போது அவர் இந்த சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “அந்த ஒரே பள்ளியில் என் நான்கு குழந்தைகளும் வெவ்வேறு காலகட்டங்களில் படித்துள்ளனர். எனக்கு 20 வயதாக இருக்கும்போது என் முதல் குழந்தைக்காக அங்கு சென்றேன். பிறகு 30 வயதிலும் சென்றேன்; இப்போது எனக்கு 55 வயதாகிறது, தற்போதும் அதே பள்ளியில்தான் நிற்கிறேன். அங்குள்ள ஆசிரியர்கள் கூட மாறிவிட்டார்கள், ஆனால் நான் இன்னும் மாறவில்லை!” என்று கூறினார்.
இதைக் கேட்டு சிரித்த தொகுப்பாளர் கபில் சர்மா, “சார், ஒவ்வொரு தசாப்தத்திலும் உங்களுக்கு ஒரு குழந்தை பிறப்பது ஒரு வரம்” என்றார். உடனே கரீனா கபூர் தனது கணவரிடம், “சைஃபு, ஒவ்வொரு தசாப்தத்திலும் உனக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அடுத்து என்ன பிளான்?” என்று கேட்க, அங்கிருந்த அர்ச்சனா பூரன் சிங், “அடுத்த தசாப்தம் வரப்போகிறது” என்றார். அதற்கு கரீனா உடனே சாமர்த்தியமாக, “ஆம், வரப்போகிறது, ஆனால் என்னோடு அல்ல” என்று பதிலளித்தார். இதனால் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
தொடர்ந்து, 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகும் இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பதன் ரகசியம் குறித்துப் பேசிய சைப், தங்களின் வீட்டில் அனைவரும் நெய் சாப்பிடுவதைக் குறிப்பிட்டார். மேலும், “கரீனா நெய்யை சாப்பிடுவது மட்டுமின்றி, இரவில் தனது கால்களிலும் தேய்த்துக்கொள்வார். கற்பனை செய்து பாருங்கள், ஒரு ரொமாண்டிக் தருணத்தில் எங்கள் படுக்கையறை முழுக்க ஒரு தாபா ஹோட்டல் போல நெய் வாசம் வீசும்” என்று கிண்டலாகக் கூறி படுக்கையறை ரகசியத்தை உடைத்தார். அதற்கு கரீனா, “அது உடலுக்கு மிகவும் நல்லது” என்று விளக்கமளித்தார்.
