LATEST NEWS
என்னடா கலரு இது?… சிங்குச்சா சிங்குச்சான்னு…. இதுல தொப்பி வேற…. வனிதாவை வச்சு செய்யும் ஃபேன்ஸ்…!!!

குக் வித்து கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் இதற்கான ப்ரோமோ தொடர்ந்து வெளியாகி வருகின்றது. குக் வித் கோமாளி ஓன்று முதல் நான்கு சீசன் வரை கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் வந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.

#image_title
அந்த வகையில் வனிதா விஜயகுமாரும் ப்ரோமோ வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை தான் தற்போது வைரலாகி வருகின்றது. பிங்க் கலர் உடையில் பிங்க் கலர் தொப்பியுடன் வந்திருந்தார். இது பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாக இருந்ததால் இணையத்தில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் செமயாக கலாய்த்து வருகிறார்கள்.

#image_title
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக வரப்போகிறார்கள். கோமாளிகளாக ராமர், குரேஷி, புகழ் கலந்து கொள்ளப் போகிறார்கள். இந்நிலையில் வனிதாவின் ட்ரெஸ் தற்போது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டாக மாறி இருக்கின்றது.