ஹீரோவாக களமிறங்கும் வனிதா விஜயகுமார் மகன்….! அதுவும் அந்த பிரபல இயக்குனரின் படத்திலா?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோவாக களமிறங்கும் வனிதா விஜயகுமார் மகன்….! அதுவும் அந்த பிரபல இயக்குனரின் படத்திலா?…!!!

Published

on

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான ஸ்ரீஹரி தற்போது ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவார். குடும்பப் பிரச்சினை காரணமாக விஜயகுமார் வனிதாவை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரது பேத்தி திருமணம் நடைபெற்றது.

#image_title

அப்போது கூட அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. கடந்த 1995ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகன்தான் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா. இருவரும் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதே ஆண்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார்.

#image_title

திருமணத்திற்கு பிறகு மகன் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று வனிதா விஜயகுமார் சண்டை போட்டார். ஆனால் வழக்கில் ஸ்ரீஹரி ஆகாசுடன் இருக்க வேண்டும் என்று தீர்ப்பானது. இதை தொடர்ந்து ஸ்ரீ ஹரி ஆகாஷ் உடன் தான் வளர்ந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீ ஹரி மைனா கும்கி தொடரி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

#image_title

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை எப்படியாவது ஒரு நடிகையாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து வருகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரின் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக போகிறார் என்று தெரிகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in