ஹெச் வினோத் – விஜய் கூட்டணி…. கன்ஃபார்மான தளபதி 69…. கிரீன் சிக்னல் கிடைச்சிருச்சு…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹெச் வினோத் – விஜய் கூட்டணி…. கன்ஃபார்மான தளபதி 69…. கிரீன் சிக்னல் கிடைச்சிருச்சு…!!!

Published

on

கோட் திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாக இருக்கின்றது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருக்கின்றார்.

#image_title

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. அதனை தொடர்ந்து போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

#image_title

இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது. கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ஏச் வினோத் இவர்களில் யாராவது ஒருவர் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எச் வினோத் தான் தளபதியின் 69 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. கோட் படப்பிடிப்பு முடிந்த பிறகு தளபதி 69-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in