LATEST NEWS
கோட் ரிலீஸ் எப்போ தெரியுமா?…. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இறக்கும் படக்குழு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோட். இந்த திரைப்படம் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முதலில் உருவாகும் திரைப்படம் கோட். இதனால் இப்படம் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கின்றது. வெங்கட் பிரபு திரைப்படம் என்றால் எப்போதும் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இருக்காது.

#image_title
ஒரு கமர்சியல் கலகலப்பான படமாக கோட் திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அதாவது மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது.

#image_title
கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.